முஸ்லிம்களின் நகங்ளை பிடுங்கி அதற்குள் கொச்சிக்காய்துாள் வைத்தவர்கள் புலிகள்தமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டில் சிறுபான்மையினராக அன்று தொட்டு வாழ்ந்து வருகின்றனனர். இரு இனங்களும் பேசும் மொழி தமிழ் என்ற காரணத்தினால் நடைமுறையில் இரு இனங்களும் பிட்டும் தேங்காய்ப் பூவும் போல உறாவடி கொண்டு இருந்தனர். இது வடக்கில் மாத்திரமல்ல கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் இருந்தது.

எப்போது சிங்களவர்களால் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு ஆயுதப்பேராட்டங்களுக்கு தயாரானார்களோ அன்று தொடக்கம் இரு இனங்களும் பிரிந்தன என்றுதான் சொல்ல வேண்டும் மதத்தால் வேறுபட்டாலும்  மொழியால் ஒன்றுபட்ட இவர்கள் பல பேராட்டங்களை இணைந்து சந்தித்தினர்.

சிங்களவர்களுக்கு எதிரான ஆயுதக்குழுக்கள் காலம் தொட்டு அவ்வாயுத குழுக்களில் விரும்பி இணைந்த முஸ்லிம் இளைஞர்கள் குறித்த பேராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தனர். பின்னர் சிறிய ஆயுதக்குழுக்களை அழித்து விடுதலைப்புலிகள் இயக்கம் தங்களை தனியொரு சக்தியாக பரிணமிக்க செய்தது. அங்குதான் பிரச்சினை உருவாகியது. முன்னர் வேறு குழுக்களில் இருந்த முஸ்லிம் இளைஞர்களை கடத்தினர், பலவந்தமாக சில இளைஞர்களை தங்களுக்குள் இணைத்தனர்.

கடத்திய இளைஞர்களை விடுவிக்க கப்பம் கேட்டனர், அவர்களின் நகங்களை பிடுங்கி அதற்குள் கொச்சித்துாள் தடவினர், விரல்களை அறுத்தனர், முதுகில் பிரம்பால் அடித்து ஐஸ் வைத்தனர். தலைமுடியை அரைவாசியாக மொட்டை அடித்தனர், மீசையை அரைவாசி வெட்டிவிட்டனர். வீதிகளி்ல் கட்டிவைத்து இரவில் சுட்டனர். 

இப்படி அடுக்கடுக்காய் அநியாயம் செய்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்துவிடமாட்டாயா என பலர் இறைவனை பிரார்த்தனை செய்தனர். இது வரலாறு. இதற்காகவே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மஹிந்தவை ஆதரித்தனர். கொடிய யுத்தமும் ஈனமான செயல்களும் முடிவுக்கு வந்தது. இதனை மறக்க கூடாது என்பதற்காகவே இந்த பதிவு எழுதப்பட்டது.

-பஹத் ஏ.மஜீத்