முஸ்லிம்களுக்கு ஏன் இந்த இனவாத நெருக்கடி? ஏதும் திட்டமிடப்படுகிறதாவேண்டுமென்று முஸ்லிம்களை சீண்டி உருக்குலைக்க எண்ணுவதாக உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்தும் கூட நல்லாட்சி அரசாங்கள் குறித்த அஸ்திவாரங்களை ஒன்றும் பண்ணிவிடவில்லை. அந்த அஸ்திவாரங்கள் வெளிப்படையாக இனாவதம் கக்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதனை அஸ்தமனமாக்கினால் அனைத்தும் அடங்கிவிடும் ஆனால் அடக்கிவிட்டால் பிரச்சினைகள் ஏதும் இருக்காது - பிரச்சினைகள் இருந்தால்தானே அரசியல் செய்யலாம்.

ஒரு காலத்தில் தமிழ் மக்களை சீண்டி அவர்களை தீவிரவாதிகளாக்கி ஆயுதம் ஏந்த வைத்து அவர்களை கொன்றழித்தனர். இன்று முஸ்லிம்களை சீண்டுகின்றனர் எதையோ முஸ்லிம்களிடம் எதிர்ப்பார்ப்பது போல தெரிகிறது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் பிரச்சினைகள் ஏற்பட்டுவிடாமல், காரணம் அப்படி ஏதும் ஏற்பட்டு விட்டால் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்கள்தான்.

இலங்கை ஒரு பௌத்தநாடு இங்கு முஸ்லிம்கள் சிறுபான்மையினர்தான், பௌத்த பிக்குகளுக்கு யாப்பில் கௌரவம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும் அதை ஒருகாரணமாக வைத்துக்கொண்டு இனவாதத்தை கையில் எடுத்து ஒரு இனத்தை சமூகத்தை பகிரங்கமாக தாக்குவது பிக்குகளுக்கு அழக்ல்ல. பௌத்தம் என்பது நல்வாழ்க்கைக்கு ஒரு முறை அதனை ஏனைய மக்கள் உணரும்படி செய்த அவர்களுக்கு அழகு.

ஒருபோதும் பலவந்தமாகவே அல்லது பணம்கொடுத்தோ முஸ்லிம்கள் மத அனுஸ்டானங்களை கடைப்பிடிக்க அழைக்கவில்லை. முஸ்லிம்களில் சிலர் பிழையானவர்கள் என்பதற்காக இஸ்லாம் மார்க்கம் பிழை என்று ஆகிவிடாது. பௌத்தர்கள் அதிகமாகனவர்கள் பிழையானவர்கள் அதற்காக பௌத்தம் பிழையில்லை. இன்றைய காலத்திற்கு நல்லிணக்கமும் சகவாழ்வும் அவசியம். அதனை சமூகத்தில் கட்டியெழுப்ப அனைத்து இனங்களும் முயற்சி செய்ய வேண்டும்.

-பஹத் ஏ.மஜீத்