பொதுபலசேனாவை துாக்கியெறியுங்கள் - கணக்கில் எடுக்காதீர்கள் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

பொதுபலசேனாவை துாக்கியெறியுங்கள் - கணக்கில் எடுக்காதீர்கள்

Share This


இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் மனதில் திடகாத்திரம் கொள்ள வேண்டும் இந்த நாட்டின் சமாதானத்தை நிலைநாட்டவே அந்த திடகாத்திரம். நெவடிவ் அப்றோச் (NEGATIVE APPROACH) பிழையாக தங்களை காட்டி பிரபலம் தேடல் இந்த நடைமுறை முன்னர் சினிமாவிலும் அரசியலிலும் காணப்பட்டது இன்று இது மத அனுஸ்டானம் மற்றும் மத அமைப்புக்களிலும் பரவத் தொடங்கிவிட்டது.

இப்படி தங்களை தாங்களே நல்லவர்கள் பௌத்த மதத்தை காப்பாற்றுபவர்கள் என்று கூறி சிறுபான்மை முஸ்லிம்களை அழித்த அழிக்க திட்டமிட்ட இட்டுக் கொண்டிருக்கும் பொதுபலசேனா அமைப்பை அதிகம் பிரபலம் அடையச் செய்தது நாங்கள் தான் அன்றே அவர்களை கணக்கில் எடுக்காமல் விட்டிருந்தால் இந்தளவுக்கு வளர்ந்திருக்க மாட்டார்கள்.

ஹலால் சான்றிதழை நிறுத்த அவர்கள் சொல்லியதும் முன்னுக்கு பின் மாறாக அதிக ஊடகவியலாளர் மாநாடு நடாத்தி அடிக்கடி அறிக்கை விட்டு குழப்பியது யார்? அதன் பின்னர் புத்தர் இறைச்சி சாப்பிட்டது என்று சொன்னது யார்? அடிக்கடி ஊடகவியலாளர் மாநாடு நடாத்தி அசிங்கமாக திட்டியது யார்?

முஸ்லிம் என்று பெயர்தாங்கிய அமைப்புக்களும் அரசியல் வாதிகளும் கட்சிகளும் செய்த வினைக்கே இன்று இலங்கைவாழ் முஸ்லிம்கள் கஸ்டப்படுகிறோம். அதன் காரணமாக சொல்கிறாம் பொதுபலசேனா என்ற ஒரு சொல்லை துாக்கியெறியுங்கள் கணக்கிலே எடுக்காமல் விட்டுவிடுங்கள்.

இறுதியில் அவர்களே அவர்களை உணர்ந்து கொண்டு பின்னோக்கி சென்று விடுவர், பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் போட்டியிட்டு பெற்ற வாக்குகள் எண்ணிக்கை தெரியாதா உங்களுக்கு? வி்ட்டுவிடுங்கள் இறைவன் பார்த்துக்கொள்ளுவான்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE