சிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்


தென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்தில் மாற்றம் பெறாமல் வாடிக்கையாளர் களுக்கு பாற்தேனிரையும் அது சார்ந்த உணவுப் பண்டங்களையும் விற்பனை செய்து வருகின்றது.


றசாக் ஹோட்டலை தற்பொழுது நடாத்தி வரவபவர் றசக்கின் புதல்வர் பௌருதீன், 15 வருடஙகளாக பெளுருதீனின் தந்தைதான் றசாக் ஹோட்டலை நடாத்தினார், சொல்லிக்கொள்ள வேறு உணவுப்பண்டங்கள் இல்லாவிட்டாலும் பாற் தேனீருக்கு கடிப்பான்களாக பெட்ரிஸ், கேக், காலையில் அப்பம் போன்றவையும் உள்ளது.மில்க்மெயிடில்தான் டீ தயாரிக்கிறேன் என்று பெருமைப்பட்ட பௌருதீன் சிலோன் முஸ்லிமில் ஏற்கனவே ஒரு பதிவு பிரசரித்து இன்னும் பிரலபல்யம் அடைய செய்து விட்டீர்கள் என்று நன்றி நவின்றார். நிந்தவூர் அட்டபளத்திற்கு சென்றால் டீ கடிக்க மறவாதீர்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...