மே 02ல் ரமழானுக்கு தயாராகுவோம் என்ற தலைப்பில் விசேட சொற்பொழிவு

 
 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் எதிர்வரும்
மே 02 ஆம் திகதி செய்வாய்க்கிழமை மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து "ரமழானுக்குத் தயாராகுவோம்" என்ற தலைப்பிலான விசேட உரை மௌலவி எம். டபிள்யூ. எம். பஹ்ரூத்தீன் மிஸ்பாஹி அவர்களினால் மாலை 7.00 மணிக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

மாதத்தின் முதல் வாரம் மற்றும் நான்காம் வாரம் என தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பயான் நிகழ்ச்சி தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.