இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பாக 03 கோரிக்கை முன்மொழிவு
நேற்று மாலை இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பாக சட்டத்தரணி பாறுக் சாஹிப் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவில்  SLMC, ACMC, NC, UNP கட்சியைப் பிரதிநிதிப்படுத்தும் எமதூர் அரசியல்வாதிகளும் நலன்வரும்பிகளும் ஒன்றினைந்து  நேரடியாகச் சென்று கிழக்குமாகாண  முதலமைச்சர் கௌரவ ஹாபிஸ் நஸீர் அகமட் மற்றும் , EPC எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெவ்வை, EPC மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், சிப்லி பாறூக் , சுபைர் ஆகியோரை இரவு ஒரு மணிவரைக்கும் சந்தித்து மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பாக வரிவாக பேசப்பட்டது இதன்போது உரிய ஆவணங்களை ஒவ்வொரு அரசியல்வாதிகளிடமும் கையளிக்கப்பட்டு எமது சமுகத்தின் நலன்கருதி பின்வரும் மூன்று கோரிக்கைகளை அவர்களிடம் முன்மொளியப்பட்டது.

01.மாகாணக் காணி ஆனையாளரின் அவசர முடிவுளை இடைநிறுத்தல்
02. மாயக்கல்லி மலைக் காணி பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் ஆணைக்குழு ஒன்றை மாகாண சபையினூடாக  நியமித்தல்.
03. இவ் விடயத்தை SLMC, ACMC,NC கட்சித் தலைவர்கள் மூன்று பேரும் 
இணைந்து ஜனாதிபதியின் கவனத்துக்கு உடன் கொண்டு சென்று உடனடித் தீர்வு காண்பதன் மூலம் எதிர்காலத்தில் வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தலைத் தடுத்தல். 

மோலும் இவ்விடயம்தொடர்பாக மிகஅவசரமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்று இவ்வியடம் தொடர்பாக உடனடி தீர்வினை பெற்று தருமாறு வோண்டுகோள் விடுக்கப்பட்டது.