பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் – ஈரான் எல்லை பாதுகாப்பு படையினர் 10 பேர் பலிபாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் ஈரான் எல்லையில், அந்த நாட்டின் எல்லை பாதுகாப்பு படையினரை குறிவைத்து நேற்று முன்தினம் கடுமையான துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த தாக்குதலில் ஈரான் எல்லை பாதுகாப்பு படையினர் 10 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு சன்னி பிரிவை சேர்ந்த நீதியின் படை என்ற தீவிரவாத அமைப்பு உடனடியாக பொறுப்பேற்றது.

இது குறித்து ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் கூறுகையில், “பாகிஸ்தான் எல்லையில் ஜீரோ பாயிண்டில் அந்த நாட்டின் தீவிரவாதிகள் நீண்ட இலக்கு துப்பாக்கிகளைக் கொண்டு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நமது நாட்டின் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்தனர்” என தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசுதான் பொறுப்பு என்று ஈரான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.