பொதுமக்கள் 15 பேர் சுட்டுக்கொலை!!

ஈராக்கின், மொசூல் நகரின் கிழக்கு பகுதியை மீட்டு விட்ட நிலையில், மேற்கு பகுதியையும் தங்கள் வசப்படுத்துவதற்காக ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து உள்நாட்டுப்படையினர் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அப்பகுதியில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் துப்பாக்கிச்சூடு வல்லுனர்களை தங்கள் பகுதிக்குள் அனுமதிக்காமலும், தங்கள் வீடுகளின் மேல், ராக்கெட் லாஞ்சர்களை அமைக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்த, உள்ளூர் மக்கள் 15 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்துச்சென்று சுட்டுக்கொன்றுள்ளனர்.

ஈராக் படையினருடனான சண்டையில் பொதுமக்களை மனித கேடயங்களாக, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அவ்வப்போது பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.