30ம் திகதியின் பின் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்!! மக்களுக்கு எச்சரிக்கை!எதிர்வரும் தினங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 30ம் திகதி தொடக்கம் இந்த மழையுடனான காலநிலையை எதிர்ப்பார்ப்பதாக அந்த நிலையம் அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

மேல் , சப்ரகமுவ , தெற்கு , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில பிரதேசங்களுக்கு பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கொழும்பு தொடக்கம் காலி மற்றும் மாத்தறை வரையிலான கரையோர பிரதேசங்களில் காலை நேரங்களில் மழை எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே மின்னலால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்வதற்காக அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களை வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.