4.4 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியது இலங்கைஇலங்கை 4.4 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுமானத்துறையில் முதலீடுகள் அதிகரித்தமை வளர்ச்சிக்கு பிரதான காரணமென மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. அத்துடன், சேவைகள், நிதிக்காப்புறுதி, தொலைத்தொடர்பாடல் முதலான துறைகள் சார்ந்த பங்களிப்பும் அதிகமாகும்.

இந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக விவசாயத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், தேயிலை இறப்பர் உற்பத்தியும் குறைந்தது என மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.