இலங்கையில் மாத்திரம் முகநூல் பயன்பாடு தொடர்பில் 850 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் இதுவரையில் முகநூல் பயன்பாடு தொடா்பில் 850 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முகநூல் தொடர்பிலான முறைப்பாடுகளில் 60 வீதமானவை பெண்களினால் செய்யப்பட்டுள்ளதாக பிரிவின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

போலியான கணக்குகளை தயாரித்தல், முகநூலில் படங்களை தரவிறக்கி வேறும் தேவைகளுக்கு பயன்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் முகநூல் தொடர்பில் 2200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முகநூல் பயன்பாடு தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 0112-691692 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.