அட்டாளைச்சேனை கல்லுாரி அதிபரின் அசமந்த போக்கால் மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்சிலோன் முஸ்லிம் அலுவலக செய்தியாளர்

அட்டாளைச்சேனை கல்விக்கல்லுாரி, ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஆகியவற்றிற்கு பொதுவாக இருக்கும் பள்ளிவாசல் மூடப்பட்டுள்ள நிலையில் இருக்கிறது.

ஐவேளை தொழுது கொண்டிருந்த அழகிய பள்ளிவாசல் ஒன்று மூடப்பட்டுள்ள நிலையிலிருப்புது மிகவும் கவலைக்குரிய விடயமாகும், இந்த பள்ளிவாசலுக்கு அருகாமையில் இருக்கும் வர்த்தக நிலையங்கள் உரிமையாளர்கள் மற்றும் மஹல்லாவாசிகள் இதில் தொழுது கொண்டிருந்தனர்.

இன்று சிங்கள இனவாதம் தலைதுாக்கியுள்ளது என்று பேசிவரும் நாம் நமது பள்ளிவாசல்கள் நம்மால் மூடப்பட்டுள்ளது பற்றி ஏன் கவலைப்படுவதில்லை? நாங்கள் அதிகாரத்தில் இருக்கும் கல்விக்கூடங்களில் இஸ்லாமிய சூறத்துக்களை நாங்கள் பேண வேண்டும்.

இந்த இரு கல்விக்கூடங்களிலும் முஸ்லிம் அதிபர்களே இருக்கின்றனர், அதிகப்படியான மௌலவிமார்கள் இதில் பணிபுரிகின்றனர் படிக்கின்றனர் அவ்வாறிருக்கையில் ஏன் இந்த பள்ளிவாசலை திறக்க முடியாது? இது வெறும் அசமந்த போக்கே!

அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள், இறைவன் அனைத்திற்கும் போதுமானவன்