மறிச்சுக்கட்டிக் குழாய்க் கிணறை மக்கள் பாவனைக்கும் திறந்துவிட நடவடிக்கைமறிச்சுக்கட்டி பள்ளிவாயல் அருகில் தனியார் காணி அருகில் குழாய் கிணறு அமைத்து கடற்படையினர் தொடர்ச்சியாக தமது பாவனைக்கு நீரை பெற்றுக்கொள்கின்ற போதும் அங்கு வாழும் மக்களுக்கு நீர்ப்பாவனைக்கு கடற்படையினர் அனுமதி மறுத்துவருவதாகவும் எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் கடற்படை தளபதியிடம் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, மக்கள் பாவனைக்கு அதனத் திறந்து விடுவதற்கு தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

கடற்படைத் தளபதியிடம் அசாத்சாலி இன்று காலை இந்த விடயத்தை சுட்டிக் காட்டியதுடன் இந்தப் பிரதேசத்தில் பாரியளவு நீர்த்தட்டுப்பாடு நிலவுதால் மக்கள் தேவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமெனவும் கடற்படைத் தளபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அஸாத்சாலியின் கருத்துக்களைக் கேட்ட பின்ன கடற்படையினரை மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தாம் அறிவுறுத்துவதாக கூறிய போதும், கடற்படையினரும் அதனைத் தொடர்ந்து பாவிப்பதில் தங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனை இல்லையெனவும் மனிதாபிமான ரீதியில் மக்களைப் பயன்படுத்துவதற்கும் வழி செய்துகொடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.