Apr 27, 2017

முஸ்லீம்களின் வாக்குகளை மறந்த ஜனாதிபதி, ஞானசாரருக்கு அரச அங்கீகாரம்

உமர் அலி

அம்பாறை மாவட்ட முஸ்லீம்கள் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களது அபிப்பிராயம் பெறப்படாமல், தனிப்பட்ட முறையில் நான்கு சுவர்களுக்கு மத்தியில் மாகாண காணி ஆணையாளருடனும்  ஞானாசார தேரரின் முன்னிலையிலும் ஒரு உரையாடலை நடாத்திவிட்டு அந்த உரையாடலில் இருந்து  எவ்வாறு முடிவெடுக்க முடியும்.?

இந்த விடயத்தில் ஞானசாரருக்கு  அரச அங்கீகாரம் வழங்கியது யார்.?அம்பாறைமாவட்ட முஸ்லீம் மக்கள் சார்பாக சட்டமியற்றும் அதிகாரத்தினையும்,நிருவாகம் செய்யும் அதிகாரத்தினையும்,நீதி செலுத்தும் அதிகாரத்தினையும் தமது தெரிவாளர்களான  சட்டவாக்கக்கழக பிரதிநிதிகளிடம் வழங்கியுள்ளார்கள். பாராளுமன்றம் நேரடியாக நிருவாகம் செய்வதிலும், நீதி செலுத்துவதிலும் ஈடுபடாவிட்டாலும் ஜனாதிபதி,அமைச்சரவை, அமைச்சுக்களின் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நீதிமன்றங்கள் ஊடாகவே மக்களது இறைமையையும், அதிகாரத்தையும் நிலைநாட்டுகின்றது.

சட்டரீதியாக மக்கள் தெரிவு செய்த பிரதிநிதிகளின் ஒப்புதல் இல்லாமல் அவர்கள் சார்ந்த மக்களது பிரச்சனைகளை தான்தோன்றித்தனமாக  அரசாங்க அதிபர் கையிலெடுக்க கூடாது.அவ்வாறு செயல்படுவதானது மக்களது சட்டவாக்க,நிருவாக,நீதித்துறைக்கான இறைமையையை கேலிசெய்வது போன்றதாகும்.

       மக்களது பிரதிநிதிகள் தமது அலுவல்கள் நிமித்தம், வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும் அவர்கள்  திரும்பி வரும்வரை காத்திருந்து அவர்களனைவரையும்  ஒன்றுகூட்டியே இந்தப்பிரச்சினை பற்றி முடிவெடுத்திருக்க வேண்டும்.மக்கள் பிரதிநிதிகளும் கொழும்பே கதியென்று கிடக்காமல் தமது மாவட்டத்தில் என்ன நடக்கின்றது உடனடியாக கவனம் செலுத்தவேண்டிய பிரச்சினைகள் என்ன ஆசுவாசமாக நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய பிரச்சினைகள் என்ன என்பதை புரிந்துகொண்ட தமக்கு வாக்களித்த மக்களது அபிலாசைகளில் ஒரு சிறு அளவையாவது பூர்த்திசெய்ய போராடவேண்டும்.

அரச அதிபர் என்பவர் முழு மக்களுக்கும் பொதுவான ஒருவரேயன்றி தனிப்பட  பௌத்த மக்களுக்கோ அல்ல்லது தயாகமகே அவர்களின் வேண்டுகோளிற்கு மட்டும் செவிசாய்ப்பவராகவோ இருத்தல் கூடாது.ஏனெனில் அவர் மாதாந்தம் பெறுகின்ற சம்பளத்தில் இம்மாவட்ட முஸ்லீம்களும் அரசுக்கு வரியிறுப்பது முதல் பல்வேறு வகையில் பங்குதாரராக இருக்கின்றார்கள்.

உடனடியாக அம்பாரை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லீம்  பாராளுமன்ற பிரதிநிதிகள்,மாகான சபை உறுப்பினர்கள் போன்றோர் அரசாங்க அதிபருக்கு நெருக்குதல்கள் கொடுத்து மாணிக்கமடு காணி,மற்றும் பௌத்த விகாரை கட்டும்  விடையத்தில் எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகளை மாற்றி முஸ்லீம் சமூகத்தின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதுடன் எதிர்காலத்தில்  இம்மாவட்டத்தில் எமது இருப்பினையும்  உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுமட்டுமன்றி நாட்டின் ஜனாதிபதியனவரே  ஆட்சித்துறையின் தலைவராவார் அவ்வாறு ஆட்சித்துறையின் ஜனாதிபதியானவரை பதவிக்கு கொண்டு வருவதற்கு அம்பாறை மாவட்ட முஸ்லீம்களும் முன்னணியில் நின்று கஸ்டப்பட்டவர்களே,தான் சார் சமயம் சார்ந்த பிரச்சினை என்று வரும்போது ஜனாதிபதியானவர் தனியே தனது சமூகத்தினை மட்டும் கருத்திலெடுக்காது  தனது இந்தப்பதவி கிடைப்பதற்கு அளப்பரிய பாடுபட்டவர்களுக்கு உதவிகள் செய்யாவிடினும் உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டும்.

குறிப்பு கடந்த ஜனாதிபதித்தேர்தலில்  மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அம்பாறை வாழ் பௌத்த மக்கள் 47,658  வாக்குகளை மட்டுமே அளித்தார்கள்,ஆனால் அவருக்கெதிராக போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச ஆனால் முழு முஸ்லீம் தமிழ் மக்களும் மக்களும் ஒன்றிணைந்து 170 000 இற்கும் அதிகமான வாக்குகளை அள்ளிக்கொட்டியிருந்தார்கள் என்பதை ஜனாதிபதி அவர்கள் ஒருபோதும் மறந்துவிடுதல் கூடாது.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post