வடகொரியா மீது மேலும் தடைகளை விதிக்க வேண்டும் - ரெக்ஸ் டில்லர்சன்அணு ஆயுத நடவடிக்கைக்கு எதிராக வடகொரியா மீது மேலும் தடைகளை விதிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றியபோத அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்களை கொரிய பிராந்தியத்திலிருந்து அகற்றுவதற்காக, வடகொரியாவுடன் பேச்சு நடத்த அமெரிக்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இராணுவ ரீதியான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சீனா மற்றும் ரஷ்யா எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.