மூன்றாம் உலகப்போரால் அச்சம்: பதுங்கு குழிகளை தயார்ப்படுத்தும் பொதுமக்கள் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

மூன்றாம் உலகப்போரால் அச்சம்: பதுங்கு குழிகளை தயார்ப்படுத்தும் பொதுமக்கள்

Share This
அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இருநாடுகளுக்கு இடையே அசாதாரண சூழல் நிலவி வருவதால் மூன்றாம் உலகப்போரின் விளைவுகளில் இருந்து காத்துக்கொள்ள பொதுமக்கள் பதுங்கு குழிகளை தயார்ப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இருநாடுகளின் அன்றாட நடவடிக்கைகள் சர்வதேச நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக, இரு நாடுகளை சேர்ந்த குடிமக்கள் உலகப்போர் குறித்து மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், பூமிக்கு அடியில் பதுங்கு குழிகளை ஏற்பாடு செய்து தரும் அமெரிக்காவை சேர்ந்த Atlas Survival Shelters என்ற நிறுவனம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.


இந்நிறுவனத்தின் தலைவரான Ron Hubbard என்பவர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ‘இந்த ஒரு மாதத்தில் மட்டும் பதுங்கு குழிகளை ஏற்பாடு செய்துக்கொடுக்க வந்துள்ள கோரிக்கைகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

அணுகுண்டு தாக்குதலின்போது உயிரை பாதுகாத்துக்கொள்ள இப்பதுங்கு குழிகள் பயன்படுகின்றன. நிலப்பரப்பிற்கு கீழ் ஒரு சிறிய குடில் போன்ற ஒரு புகலிடத்தை அமைத்துக்கொடுக்கும் பணியை தான் இந்நிறுவனம் செய்து வருகிறது.

இதுபோன்று ஒரு பதுங்கு குழியில் 2 பேர் வரை தங்குவதற்கு இந்நிறுவனம் 25,000 டொலர் கட்டணமாக வசூலிக்கிறது. 10 பேர் வரை ஒரு குடும்பமாக தங்குவதற்கு 1,50,000 டொலர் கட்டணமும், 117 பேர் வரை தங்குவதற்கு 1.4 மில்லியன் டொலர் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக Ron Hubbard தெரிவித்துள்ளார்.

 
lankasri

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE