பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்! பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கைநாடுகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளும் பிரசாரங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க பேஸ்புக் நிறுவனம் தயாராகி வருகிறது.

தவறான செய்திகள், தவறான தகவல்கள், பொதுமக்களை வழிநடத்த காரணமான போலி கணக்குகள் முகநூலில் இருப்பதாக கண்காணிக்கப்பட்டுள்ளது என விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சில கணக்குகள் திட்டமிட்ட வகையிலும் விரிவாகவும் இயங்கி வருவதாக கண்காணிப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் இப்படியான போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதை காண முடிந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முழு பேஸ்புக் வலையமைப்பையும் எடுத்துக்கொண்டால் இவ்வாறான செயற்பாடுகளின் எண்ணிக்கையானது சிறிதளவானது என நிறுவனம் கூறியுள்ளது. இதனிடையே பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் நடக்கும் நேரத்தில் இப்படியான 30 ஆயிரம் கணக்குகளை நீக்க முகநூல் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.