அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: இந்தியர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் அங்கு வேலை செய்யும் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள உணவு விடுதியில் வேலை செய்து வருபவர் காண்டு பட்டேன் (56).

இந்தியரான இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்தார்.
சில தினங்களுக்கு முன்னர் காண்டு பட்டேல் பணியை முடித்து விட்டு அந்த உணவு விடுதியின் பின்னால் சென்று சுற்றிப் பார்த்து கொண்டிருந்தார்.
அங்கு திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதையடுத்து அது குறித்து அறிவதில் அவர் தீவிரம் காட்டியுள்ளார்.

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் ஒரு துப்பாக்கி குண்டு காண்டு பட்டேலின் நெஞ்சில் பாய்ந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அங்கு நடந்த துப்பாக்கி சூட்டுக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து துப்பாக்கி சூட்டில் பலியான 5வது இந்தியர் காண்டு பட்டேல் என்பது குறிப்பிடத்தக்கது.