Apr 28, 2017

தடைகளைத் தாண்டி ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா நாளை
(எம்.ரீ.எம்.பாரிஸ்)

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா நாளை சனிக்கிழமை 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவ்விழா தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளை கிளம்பி, இவ்விழாவினை குழப்பி அரசியல் சாயம் பூசி விடலாம் என்ற போர்வையில் சிலர் முயற்சித்த போதும், தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இவ்விழாவின் செயற்பாட்டாளர்களாக ஆரம்ப கட்டத்திலிருத்த சிலர் தாம் சில காரணங்களுக்காக விழா தொடர்பான பணிகளில் முன்நிற்கப்போவதில்லை என்று பின்வாங்கிக்கொண்ட சந்தர்ப்பத்தில்இது எமது பாடசாலை, பாடசாலை நமக்கு எதனைச்செய்தது? என்று நினைப்போர் மத்தியில் நாம் பாடசாலைக்காக என்ன செய்யப்போகிறோம்என்ற உயர் நோக்குடன் பாடசாலையினை நேசிக்கும்  உணர்வுமிக்க பழைய மாணவர் அணியொன்று முன்வந்து விழாவிற்கான அனைத்து வகையான ஏற்பாடுகளையும் பொறுப்பேற்று பாடசாலையின் அதிபர் அவர்களுக்கும் முகாமைத்துவக் குழுவிற்கும் பூரண ஒத்துழைப்பினை வழங்கி, விழாவிற்கான ஏற்பாடுகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் பல பாடசாலைகள் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியும் விழாக்களை எதிர்பார்த்து நிற்கின்ற இச்சந்தர்ப்பத்தில் ஏனைய பாடசாலைக்கு முன்மாதிரியாக தமது பாடசாலையினை மாற்றி, உச்ச நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்ற நோக்கில் பலர் இவ்விழாவின் செயற்பாட்டாளராக அன்று தொடக்கம் இன்று வரை தியாகத்துடன் பணியாற்றி வருவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில், ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் என்ற வகையில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் முயற்சியினால் பல கோடி ரூபாய்களை அரசாங்கத்திடமிருத்து பெற்றுக்கொடுத்தது மாத்திரமல்லாது, பல்வேறுபட்ட  வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி அவர்களை ஒரு அரசியல்வாதியாக மக்கள் மத்தியில் காண்பித்து, அரசியல்வாதி இவ்விழாவின் செயற்பாடுகளுக்குப் பொருத்தமான நபரல்ல என்றும், கட்சி ரீதியாகவும் அரசியல் சாயம் பூசி விழாவினைக் குழப்பிவிடலாம் என்று சில படித்த மேதாவிகளும் கனவு கண்டனர்.

சிலர் தமது முகநூலில் நாகரீகமற்ற முறையில் விமர்சனங்களை மேற்கொண்டும் வந்தனர். இவர்களே மக்கள் மத்தியில் வீணான குழப்பங்களை ஏற்படுத்தவும், தாம் படித்த பாடசாலை என்ற ஒரே நோக்குடன் பாடசாலையின் நலன்கருதி பிரதியமைச்சர் அமீர் அலியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நூற்றாண்டு விழாவிற்கான வேலைத்திட்டங்களை விரும்பாதவர்களும், மனதளவில் கூட இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத விசமிகள் மத்தியில் இவ்விழாவினைச் சிறப்பாக நடாத்த ஒரு பாடசாலையின் பழைய மாணவனின் கடமைகள் மற்றும் பொறுப்புக்களையும் தாண்டி, இந்நாட்டின் ஜனாதிபதியை இவ்விழாவிற்கு அழைத்து வந்து, எமது ஊரின் பெருமையை எடுத்துரைக்கவும் இதுவரை காலமும் தமது பணியைச் சிறப்பாக மேற்கொண்டு வரும் பிரதியமைச்சரின் சேவை கல்குடா முஸ்லிம்களின் வரலாற்றுக் குறிப்புக்களின் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டியவை என சமூக ஆர்வளர்கள், கல்விமான்கள், அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இச்சந்தர்ப்பத்தில் பாடசாலையின் நூற்றாண்டு விழாவினைச் சிறப்பாக நடாத்த வேண்டுமென்ற நோக்கில் முன்வந்த குழுக்கள் நேற்றிரவு பாசிக்குடா அனந்தயா நட்சத்திர ஹோட்டலில் இவ்விழாவின் முன்னேற்பாடுகள் மற்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் மீளாய்வுக்கூட்டமொன்று பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் இடம்பெற்றது.


 இதன் போது பாடசாலையின் அதிபர் MAM.ஹலீம் இஸ்ஹாக், பாடசாலையின் அபிவிருத்திக்குழு, பழைய மாணவர் சங்கச்செயலாளர் சுபைர் உள்ளிட்ட விழாவின் செயற்பாட்டுக்குழுவினரும் கலந்து கொண்டனர். இதன் போது பாடசாலையில் 1993 ஆம் ஆண்டு வகுப்பு நண்பர் அணியினரினால் வடிவமைக்கப்பட்ட பாடசாலையின் 100ஆண்டு விழா பெயர் குறிக்கப்பட்ட பெறுமதிமிக்க டீ சேர்ட் மற்றும் கவ்போய் தொப்பிகளை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி வெளியிட்டு வைத்தார்
 
 இதன் போது கருத்துத்தெரிவித்த பாடசாலையின் அதிபர், “விழா ஏற்பாடுகள் தடைகளைத்தாண்டி இறைவனின் உதவியுடன் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களின் பூரண ஒத்துழைப்புடனும் பாடசாலை முகாமைத்துவக்குழு, அபிவிருத்திக்குழு, பழைய மாணவர்கள் மற்றும் ஏனைய சமூக நலன்விரும்பிகளின் பங்களிப்புடன் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.  
 
இங்கு கருத்தத்தெரிவித்த பிரதியமைச்சர் அமீர் அலி, “ விழாவுக்கு முன்னரும் பின்னரும் இது எமது பாடசாலை என்ற உணர்வுடன் ஒன்றிணைந்து பாடசாலையின் அபிவிருத்தியிலும் மாணவர்களின் கல்வியிலும் அதீத கவனஞ்செலுத்த வேண்டுமெனவும், அதற்கு பழைய மாணவர்களாகிய நாம் முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post