வரட்சியான காலநிலை : அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் உத்தரவுநீர்ப்பாசன திட்டங்களின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

மகாவலி அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் நீர்ப்பாசனத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போதே ஜனாதிபதி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தற்போது அமுல்படுத்தப்படும் மற்றும் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காலநிலை மாற்றம் மற்றும் கடந்த ஆண்டுகளின் மழை வீழ்ச்சி தொடர்பில் உரிய ஆய்வை மேற்கொண்டு நீர்ப்பாசன திட்டங்களின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானமெடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அலுவலர்களுக்கு இதன்போது உத்தரவிட்டுள்ளார்.