ஹக்கீம், றிசாத், அதாஉல்லா நாளை இறக்காமத்தில் கூட்டுச்சேருகின்றனர்!சிலோன் முஸ்லிம் அம்பாறை விஷேட நிருபர்

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் 35000 ஏக்கர் காணிகளை இழந்துள்ள நிலையில் முஸ்லிம்களின் பூர்வீக நிலப்பரப்புகளில் பௌத்த விகாரைகள் அமைப்பது, மற்றும் அடாவடித்தன இனவாத செயற்பாடுகளுக்கெதிராக நாளை முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

இது முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினை என்ற காரணத்தினால் முஸ்லிம்களின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் நாளை பேரணியில் கூட்டாக சேருகின்றனர், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா ஆகியோர் நாளைய இறக்காம பேரணியில் இணைந்து மக்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கவுள்ளனர்.

இன்சா அல்லாஹ் இந்த மூன்று கட்சிகளும்  இணைந்து முஸ்லிம்களின் நலனுக்கு பாடுபடவேண்டும் என இறைவனிடத்தில் துஆ கேட்போம்.