பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு முன்னெடுப்பு

(க.கிஷாந்தன்)

நாடாளவிய ரீதியில் உள்ள தமிழ், சிங்கள அரச பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் 26.04.2017 அன்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதலாம் தவணைக்கான விடுமுறை கடந்த 5ம் திகதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 26.04.2017 அன்று முதல் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாடசாலை சுற்றுச் சூழலை சுத்தம் செய்யும் நோக்குடன் விசேட சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் மலையகத்தில் பல பாடசாலைகளிலும் இந்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டன.

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இந்த டெங்கு ஒழிப்பு சிரமதான பணி 26.04.2017 அன்று காலை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நுளம்புகள் பரவும் இடங்களை அழித்து புகை விசுறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் பாடசாலை வளவுகளை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடக்கது.