சிவனொளிபாதமலையில் பதற்றம் பொலிஸார் குவிப்பு!!சேகு

சிவனொளிபாதமலையில், அத்துமீறி புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கு சிங்ஹ லே அமைப்பு எடுத்த முயற்சியை நல்லத்தண்ணிப் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவத்தால் சிவனொளிப்பாதமலையில், நேற்று   பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது, இதனால், சிவனொளிப்பாதமலையிலிருந்து நல்லத்தண்ணி நகர் வரை பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.

குறித்த பகுதிக்கு சென்ற சிங்ஹ லே அமைப்பினர், சிவனொளிப்பாதமலை சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்றவகையில், புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்ய முயற்சித்துள்ளனர், எனினும் இவ்வாறான செயற்பாடுகள் இனவாத பிரச்சனைகளை தோற்றுவிக்கும் என கூறி சிலை வைப்பதற்கான  முயற்சிகளை அப்பகுதி பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

எல்லா மதத்தினரும் ஒன்றாக, ஒற்றுமையாக சென்று வழிபடும் ஒரு இடமாக சிவனொளிப்பாதமலை இருந்து வருகிறது எனினும், சில பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் தொடர்ந்து அப்பகுதி பௌத்த மதத்தினருக்கு மட்டுமே உரித்தானது என கூறி இனவாத செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.