அக்கரைப்பற்றில் பாரிய பன்சலை இன ஐக்கியம் கூறும் அக்கரைப்பற்று மாநகரம்



அக்கறைப்பற்று மாநகர சபைக்குற்பட்ட எல்லையில் மிகப் பெரிய பன்சலை ஒன்று அமைந்திருப்பது அனைவரும் அறிந்த விடயம். 50ற்கு உற்பட்ட சிங்கள குடும்பங்கள் வாழும் அக்கறைப்பற்று மாநகரத்தில் இந்த பாரியதொரு பன்சலை அமைந்திருப்பது எந்த விதத்திலும் முஸ்லிம்களை தாக்கவும் இல்லை முஸ்லிம்களை சிந்திக்க வைக்கவும் இல்லை.

இப்படி இருக்கிற பொழுது அந்த பன்சலைக்கு வருகிற பக்தர்களுடைய எண்ணிக்கையைப் பார்த்தால்   உதாரணமாக போயா தினங்களில் 50 தொடக்கம் 70 வரையிலான எண்ணிக்கையானவர்களும் இது தவிர ஞாயிற்றுக் கிழமைகளில் 10 தொடக்கம் 20 வரையிலான மக்களும் இங்கு வருகை தருகிறார்கள். ஆக இந்த பகுதியில் இருக்கிற பாரியதொரு பன்சலையில் பக்தர்களின் எணணிக்கை மிகவும் குறைவாக இருக்கின்றது.

இவ்வாறு இருக்கிற  பொழுது இறக்காமம் மாயக்கல்லி பகுதியில் புதிதாக பன்சலை அமைத்து எதை அவர்கள் சாதிக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இறக்காமத்தை பொருத்த வரைக்கும் பன்சலை கட்ட இருக்கும் பகுதியில் சிங்கள குடும்பம் என்று பார்த்தால் எந்தவிதமான சிங்கள குடியேற்றங்களும் இல்லை. அப்படி அந்த பன்சகை்கு சிங்கள  பக்தர்கள் வருவதாக இருந்தால் அவர்கள் சியம்பலாந்துவ அம்பாறை பதியத்தலாவை நகரில் இருந்து தான் வர வேண்டும்.

ஆகவே இது ஒரு திட்டமிடப்பட்ட முஸ்லிம்களை குழப்புகின்ற விடயமாக காணப்படுகின்றது. முஸ்லிம்களை சீண்டி முஸ்லிம்களை சிந்திக்க வைத்து இனவாதம் பரப்பும் சிங்கள இனவாதிகள் விகாரை அமைத்துத் தான் இந்த குழப்பி இருக்கின்றார்கள்.

குறிப்பாக ஞானசார பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்களை குழப்பியே இந்த நாட்டினுடைய ஆட்சியை கவிழ்த்திருக்கிறார்கள். உதாரணமாக அளுத்கம கலவரம் சிலேவைலன் பள்ளிவாசல் விவகாரம் கூரகல பள்ளி விவகாரம் அனைத்திலும் தன்னுடைய மூக்கை நுழைத்த பொதுபலசேனா ஞானசார அமைப்பு இன்று இறக்காமம் மாயக்கல்லி பகுதிக்கு வருகை தந்திருப்பது மிகவும் கேள்விக்குள் ஆழ்த்தி இருக்கின்றது.

பொதுபலசேனாவிடத்தில் பகிரங்கமாக ஒரு விடயத்தை  சொல்ல வேண்டும்  அக்கறைப்பற்று பிராந்தியத்தில் இருக்கின்ற பாரியதொரு பன்சலையில் பக்தர்கள் இல்லாத போது புதிதாக மாயக்கல்லி பிரதேசத்தில் இவர்கள் பன்சலை கட்டி எதை சாதிக்கப் போகிறார்கள் என்ற விடயத்தை நாங்கள் கேட்க வேண்டும். இது தவிர அக்கறைப்பற்று மாநகரத்தில் இன ஐக்கியமாக முஸ்லிம் பள்ளிவாசல் இந்து கோயில் பன்சலை இருக்கின்ற அந்த பகுதியில் எந்தவிதமான பிரச்சினைகளும் எழுந்து விடவில்லை.

ஆகவே இன ஐக்கியத்தை எப்போதும் விரும்புகின்ற முஸ்லிம்கள் இப்படியான பன்சலை அமைப்புக்கு ஒரு போதும் எதிர்த்து விடவில்லை ஆனால் பலவந்தமாக பலாத்காரமாக அமைக்கப்படுகின்ற விகாரைகள் பன்சலைகள் சிலைகள் தான் முஸ்லிம்களை சிந்திக்க வைக்கிறது.