இறக்காம மக்கள் போராட்டத்தில் ஹக்கீம்; அதாவும் றிசாதும் பங்குகொள்ளவில்லைஇறக்காமத்திலிருந்து சன்சீர் மற்றும் சுஹைல்

இறக்காமம் பிரதேசத்தில் சிலைவப்புக்கெதிராகவும் விகாரை கட்டுமானப்பணிக்காகவும் எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர், இந்த பேரணிக்கு வருகை தருவுதாக அமைச்சர் றிசாதும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும் குறிப்பிட்டிருந்தனர் ஆனால் வருகை தரவில்லை என்றாலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கலந்து கொண்டிருந்தார்.

நல்லாட்சி கள்ளாட்சி என்று கூக்குரலிட்ட மக்கள் மூன்று தொடரணியாக இறக்காம பிரதேச செயலகத்தை வந்தடைந்து பின்னர் மகஜர் ஒன்றை கையளித்தனர்.