மசிடோனியா நாட்டில் பாராளுமன்றத்துக்குள் புகுந்து போராட்டக்காரர்கள் தாக்குதல்ஐரோப்பிய நாடான மசிடோனியாவில் அல்பேனியன் நாடு உருவானத்தில் இருந்து கடந்த 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
முன்னாள் பிரதமர் நிகோலா குருவ்ர்கியின் வி.எம்.ஆர்.ஓ. கட்சி, ஆட்சி முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சோசியல் ஜனநாயக கட்சி தலைவர் ஷோரன்‌ஷயீவ் அல்பேனியா ஆதரவு பெற்ற கட்சியுடன் இணைந்து புதிய அரசு அமைக்க முயன்று வருகிறார்.இதற்கிடையே மசிடோனியா பாராளுமன்றத்தில் அல்பேனியன் கட்சியை சேர்ந்தவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வி.எம்.ஆர்.ஓ. கட்சியினர் 200 பேர் பாராளுமன்றத்துக்கு பேரணியாக சென்றனர்.

பின்னர் திடீரென பாராளுமன்றத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதில் சோசியல் ஜனநாயக கட்சி தலைவர் ஷோரன் ‌ஷயீவ் உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர். இதற்கிடையே சோசியல் ஜனநாயக கட்சி மற்றும் அல்பேனியன் கட்சி இணைந்து புதிய அரசு அமைக்கும் முயற்சிக்கு அதிபர் தடை விதித்துள்ளார்.

RELO NEWS