Apr 24, 2017

உலகை கலங்க வைத்த அமெரிக்கா வீசிய அணு குண்டுகள்



உலக வரலாற்றில், அணு ஆயுதங்கள் நாட்டின் ராணுவ பலத்தின் சின்னமாகவும், ராணுவ தொழிநுட்ப வளர்ச்சியை பறைசாற்றும் முயற்சியாகவும் கருதப்படுகின்றன. அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே ஆரம்பத்தில் அதிக பனிப்போர் நடைபெற்று வந்தது.

இந்த இரு நாடுகளுக்கு அடுத்தபடியாக, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு, அதனை உருவாக்க ஆரம்பித்தன. இந்த ஐந்து அணுஆயுத நாடுகளும் இணைந்து அணு ஆயுத பரவலை தடுக்க வழிசெய்யும் ஓர் ஓப்பந்ததை (NPT) உருவாக்கி, மற்ற நாடுகளையும் அதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தின.


அணுஆயுத பரவல் தடுப்பு ஓப்பந்தத்தில் சரத்துகள் விவாதத்துகுரியவையாக சில நாடுகள் கருதியமையால், இந்த ஓப்பந்தம் முழு வெற்றி அடையவில்லை. ஓப்பந்ததை விட்டு விலகி சில நாடுகளும் (வட கொரியா), ஓப்பந்ததில் கையெழுத்திடாமல் சில நாடுகளும் (இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, மற்றும் இஸ்ரேல்) அணு ஆயுத தொழிநுட்பத்தை அடைந்தன.

2006ம் ஆண்டு, ஜனவரி மாதம் பாகிஸ்தானை சார்ந்த பிரபல விஞ்ஞானி அப்துல் கதீர் கான், தான் ஈரான், லிபியா, வட கொரியா ஆகிய நாடுகளுக்கு அணு ஆயுத தொழில்நுட்பத்தை விற்றதாக ஒப்புக்கொண்டார்.

இது வளர்ந்த நாடுகளிடயே பெரும் அதிச்சியலையை உருவாக்கியது. அதே ஆண்டு அக்டோபரில் வட கொரியா தனது, முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது. அன்று தொடங்கிய இந்த அணுகுண்டு சோதனையின் தாக்கும் இன்று தீவிரமடைந்து மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது.

வடகொரியா தனது அணு ஆயுத சோதனை மேற்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஐநா மற்றும் அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்தபோதிலும், அதற்கு அடிபணியாத வடகொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறது.

அணு ஆயுத சோதனையில் பல்வேறு நாடுகள் தீவிர காட்டி வந்தாலும், உலக வரலாற்றில் இந்த அணு ஆயுதத்தை பயன்படுத்திய முதல் நாடு அமெரிக்கா ஆகும். இண்டாம் உலகப்போரின் போது லிட்டில் பாய், பேட் மேன் ஆகிய அணுகுண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் திகதி, லிட்டிபாய் என்ற வெடிகுண்டை ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசியது.

600 மில்லிகிராம் யுரேனியத்தில் அணுக்கரு பிளவு வினை நடக்க. கதிர்வீச்சுடன் 18 கிலோ டன் டிஎன்டி வெடிபொருளுக்கு இணையான வெப்பம் வெளியானது. குண்டு விழுந்த இடத்தில் இருந்தவர்கள் அதிக உஷ்ணம் தாங்காமல் உருத்தெரியாமல் கருகியது உள்பட பலி எண்ணிக்கை 66 ஆயிரம். பாதிக்கப்பட்டவர்கள் 69 ஆயிரம் பேர்.

இதற்கு அடுத்த படியாக ஆகஸ்ட் 9ம் திகதி, ஜப்பானின் நாகசாகி நகரத்தின் மீது பேட் மேன் எனும் அணுகுண்டு வீசப்பட்டது. 10 அடி நீளம், 5 அடி குறுக்களவு கொண்டது. இதில் பயன்படுத்தப்பட்டது புளூட்டோனியம் 239 தனிமம்.
இதிலும் அதே அணுக்கருவு பிளவு வினைதான். கதிர்வீச்சுடன் 21 கிலோ டன் டிஎன்டி வெடிபொருள் அளவுக்கு வெப்பம் ஏற்பட்டதில் 39 ஆயிரம் பேர் பலி. 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

 உலக அணு ஆயுத வரலாற்றில் இந்த இரு அணு குண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது வடகொரியா அணு ஆயுத நாடாக மாறிவரும் நிலையில், 3 ஆம் உலகப்போர் நடப்பதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. கடந்த 2006 அக்டோபரில் வடகொரியா தனது முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியது. இதைத்தொடர்ந்து 2009, 2013-ல் அடுத்தடுத்து அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டன.

கடந்த 2016 ஜனவரி, 2016 செப்டம்பரில் அதிக சக்திவாய்ந்த அணு ஆயுதங்கள் சோதனை செய்யப்பட்டன. வடகொரியா கடந்த ஆண்டு இறுதியில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தியது. அந்த வரிசையில் 6-வது முறையாக அணுஆயுத சோதனை நடத்த வடகொரியா தயாராகி வருகிறது.

வடகொரியாவின் இந்த தொடர் சோதனை அமெரிக்காவுக்கு உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கு பலமுறை எச்சரித்தும், அதனை கண்டுகொள்ளாத வடகொரியா, நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம், எதற்கும் தயாராக இருக்கிறோம் என கூறிவருவதால், வடகொரியா நாட்டின் வடக்கில் அமைந்துள்ள ரஷ்யா, சீனா மற்றும் தெற்கில் அமைந்துள்ள தென்கொரியா ஆகிய நாடுகள் எதற்கும் தயாரான நிலையில் உள்ளன
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post