ஹசன் அலியினால் தொடுக்கப்படும் கேள்விகளுக்கு ஹக்கீம்தான் பதிலளிக்க வேண்டும்




ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகமும் அமைச்சருமான ஹசன் அலியினால் முஸ்லிம் காங்கிரசின் தலைமையான அப்துர் ரவூப் கிபத்துல் ஹக்கீமிற்கு எதிராக பகிரங்கமாக  தொடுக்கப்படுகின்ற கேள்விகளை கட்சியின் தலைமை ஏன் இன்னும் மறுக்கவில்லை என நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் கேள்வி எழுப்புகின்றார்.

மேலும் உதுமான் கண்டு நாபீர் தனது அறிக்கையில்.. அவ்வாறு முஸ்லிம் காங்கிரசின் தலைமை தனக்கு எதிராக தொடுக்கப்படுகின்ற பகிரங்க குற்றச்சாட்டுக்களுக்கும், கேள்விகளுக்கும் எதுவித நேரடி பதில்களும் இல்லாமல் மெளனித்து வருவதானது மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என்றாகிவிடும்.

ஆகவே அண்மையில் நிந்தவூர், ஒலுவில், பொத்துவில், பாலமுனை போன்ற பிரதேசங்களில் முனனள் செயாலாளர் நாயகம் ஹசன் அலி, தவிசாளர்களான அன்சில் மற்றும் தாஹிர் போன்றவர்களினால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசனை தூய்மைபடுத்தும் நோக்கில் நடாத்தப்பட கூட்டங்களில் கட்சிகும் கட்சியின் தலைமைகும், எதிராக முன்வைக்கப்பட்ட கோசங்களுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் எதிராக தகுந்த விடையினை இன்னும் முஸ்லிம் காங்கிரசின் தலைமை கூறாமல் தனது் வால்களை வைத்துக்கொண்டு அறிக்கைகளை விட்டவாறு திசைமாற்ற நினைப்பதானது கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு அவர் காட்டுக்கின்ற சானக்கிய தலைமைத்துவத்தின் உச்ச கட்டத்தினை எடுத்து காட்டுவதாக அமைக்கின்றது.

முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு எதிராக பகிரங்கமாக வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு தலைமையே பதிலளிக்க வேண்டுமே தவிர தலைமைத்துவத்தின் அடிவருடிகளாக செயற்படுகின்ற வால்கள் அல்ல. அத்தோடு ஹசன் அலி தரப்பினரையும், ஹக்கீம் தரப்பினரையும் கிழக்கிலே ஒரே மேடையில் விவாத்திது மக்களுக்கு தெளிவு படுத்துவதற்காகன ஏற்பாட்டினை நாபீர் பெளண்டேசன் செய்வதற்கு தயாராக இருக்கின்றது. அதற்கு முஸ்லிம் காங்கிரசின் தலைமையும் கட்சியும் தயாராக இருக்கின்றதா என நாபீர் பெளண்டேசன் பகிரங்க கேள்வி எழுப்புவதாகவும் உதுமான் கண்டு நாபீர் தெரிவிக்கின்றார்.