மலேசியா மலாயா பல்கலைக்கழகத்திற்கும் - தென்கிழக்கு பல்கலைக்ககழகத்திற்குமிடையில் ஒப்பந்தம்

 
 
மலேசியா மலாயா பல்கலைக்கழகத்திற்கும் - தென்கிழக்கு பல்கலைக்ககழகத்திற்குமிடையில் ஒப்பந்தம் நேற்று இரவு(27) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்  கல்கிசையில் உள்ள கற்கை நிலையத்தில் வைத்து  கைச்சாத்திடப்பட்டது. இதன் இரு பலக்லைக்கழகங்களது கல்வி நடவடிக்கைகள், பாடவிதானம், புலமைப்பரிசில் மற்றும் மேற்படிப்புகளுக்கும்  நன்மை பயக்கும். 

இவ் ஒப்பந்தத்த நிகழ்வுகள் கலாநிதி ஏ றமீஸ் தலைமையில் நடைபெற்றது.  தென்கிழக்கு உபவேந்தா் பேராசிரியா் எம்.எம்.எம் நாஜீம்  மலேசியா மலாயா பல்கலைக்கழகத்தின்  கல்விகற்கை நெறிகளுக்கான பேராசிரியை கலாநிதி மரினா மேடி நுாா் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனா்.  இந் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியா்கள் விரிவுரையாளா்கள் பல்கலைக்கழக கவுண்சில் உறுப்பிணா்கள் பதிவாளா்களும் கலந்து சிறப்பித்தனா்