பிரித்தானியாவில் ஹிஜாப் மற்றும் ஹபாயாக்கு தடை விதிப்புஇஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் ஹைஜாப் மற்றும் ஹபாயா ஆகிய ஆடைகள் அணிவதற்கு தடைவிதிப்பது தொடர்பிலான விடயங்களை முன்னிறுத்தி பிரித்தானியாவின் யுகிப் கட்சி தனது தேர்தல் பரப்புரையை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுதேர்தலை முன்னிட்டே இவ்வாறான பரப்புரையை நடத்த தீர்மானித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நிரலை நாளைய தினம் யுகிப் கட்சியின் தலைவர் பால் நுட்டால் அறிவிக்கவுள்ளார். ஹபாயா மற்றும் ஹைஜாப் ஆடைகள் சமூக ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையுமெனவும் அவர் தெரிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இஸ்லாமிய பாரம்பரியத்தின் பாகமாக உள்ள மத விதிகளை உள்ளடக்கிய ஷரியா சட்டத்தை தடைசெய்வதற்கான பரிந்துரையையும் அவர் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.