சவூதி மாநாடு தொடர்பில் ஏ.எச்.எம்.அஸ்வரின் விசேட வானொலி நிகழ்ச்சி
(எம்.எஸ்.எம். ஸாகிர்)

சவூதி அரேபியாவிலுள்ள தாருல் இப்தாவின் ஏற்பாட்டின் கீழ் நாளை மறுதினம் (27) வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் உலக சமாதானத்திற்கான மாநாடு சம்பந்தமாகவும் இலங்கை இஸ்லாமிய நிலைய ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகருமான எம்.எச். முஹம்மத் பற்றியும் நாளை(26) இரவு மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் தேசிய சேவையில் முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ. எச்.எம். அஸ்வருடைய விசேட உரை இடம்பெறவுள்ளது.