காப்பாற்றுங்கள் என கதறிய சிறுவன்: லண்டனில் ஓட ஓட வெட்டிக் கொலை
பிரித்தானியா தலைநகர் லண்டனில் 17 வயது சிறுவன் முகமூடி அணிந்த மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Battersea மாவட்டம் Ingrave Street தெருவிலே இக்கொடூர கொலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது பயங்கர ஆயுதங்களுடன் முகமுடி அணிந்து காரில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், தெருவில் சைக்கிளில் வந்த 17 வயது சிறுவனை ஓட ஓட வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சிறுவனின் கதறலை கேட்டு அப்பகுதி குடியிருப்பாளர்கள் எச்சரிக்கை உடனே ஒலியை எழுப்பியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ உதவியாளர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறிது நேரத்தில் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவயிடத்தில் தடயவியல் நிபுணர்கள் குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருந்தால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.