பாடசாலைகளில் டெங்கு தேடும் நடவடிக்கை; இருந்தால் அதிபருக்கு வழக்குஅரச பாடசாலைகளில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் கண்டெடுக்கப்படின், அந்தப் பாடசாலை அதிபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாளையும் (28) நாளை மறுதினமும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள், பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து, நாடு முழுவதுமுள்ள சகல பாடசாலைகளிலும் டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்படுகின்றதா என்பதை கண்டறிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையில், டெங்கு நுளம்புக் குடம்பிகள் இருப்பதாக கண்டறியப்படும் பாடசாலைகளுக்கு ஒரு மாத கால அவகாசம் அதனை அழிப்பதற்கு வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
அத்துடன், குறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது