இரண்டு மாதத்திற்குள் இறக்காமத்தில் விகாரை கட்டுவோம்; பொதுபல ஞானசார உறுதிஇறக்காமம் மாயக்கல்லி பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் விகாரை ஒன்றை எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் கட்டிமுடிப்போம் என உறுதியாக கூறியுள்ளார் பொதுலசேனாவின் முக்கிய சூத்திரதாி ஞானசார தேரர்.

நேற்று 25ம் திகதி இறக்காம பிரதேசத்திற்கு வருகை தந்த இவர், அம்பாறை அராசாங்க அதிபர் உள்ளிட்ட பலரை சந்தித்துள்ளார், இதனடிப்படையில் இரண்டு ஏக்கர் காணி வழங்கப்படுமென கூறப்பட்டுள்ளது. யார் தடுத்த போதிலும் விகாரை அமைக்கப்படும் என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்று சென்றிருக்கிறார். கொழும்பு சென்ற ஞானசார இனவாத ஊடகங்களுக்கு விகாரை விரைவில் கட்டப்படும் என பேட்டி கொடுத்துள்ளார்.

இறக்காமம், வரிப்பத்தாச்சேனை, தீகவாபி, ஒலுவில் அஸ்ரப் நகர், ஆலம் குளம், இலுக்குச்சேனை, 8ம் கட்டை, நீத்தை, வட்டமடு, உள்ளிட்ட பிரதேசங்கள் அடங்கிய ஒரு நிலப்பரப்பை தங்கள் வசமாக்கி கொள்ள இனவாதிகள் திட்டமிட்டுக்கொண்டிருப்பதன் ஆரம்பக கட்ட பணிகளே இது.