வைத்திய நிருவாக சேவையில் சித்திபெற்ற முஸ்லிம் வைத்தியர்களால் முஸ்லிம்களுக்கு பெருமைஅகில இலங்கை ரீதியில் கொழும்புப் பல்கலையினால் நடத்தப்படும் பட்டப் பின்படிப்பு   வைத்திய நிர்வாக சேவை MSc(Medical Administration) பரீட்சையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமை புரிகின்ற அக்கரைப்பற்றை சேர்ந்த Dr. Rajab (M.B.B.S) மற்றும் Dr. Mashood (M.B.BS) ஆகியோர் சித்தியடைந்து  தொழில் பயிற்சி நெறிக்குத் தேர்வாகியுள்ளனர். தேர்வாகியுள்ளவர்களில் இவர்கள் இருவருமே முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பரீட்சையில் அதிக எண்ணிக்கையானாவர்கள்  கலந்து கொண்டு பரீட்சை எழுதிய போதிலும் இவர்கள் இரண்டு பேரயும் தவிர கிழக்கு மாகாணம் மற்றும் தமிழ் பேசுபவர்கள் என எவரும் சித்தியடையவில்லை என்பதும் குறிப்பித்தக்கது.


முழு இலங்கை முஸ்லிம்களுக்கும் பெருமை தேடிதந்த இருவரையும் எமது சிலோன் முஸ்லிம் வாழ்ததுகிறது