எல்லாம் ஓர் குட்டையில் ஊறிய மட்டைகள் தான்கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னால் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ தோற்கடிக்கப்பட்டார்.அதற்கு காரணங்களாக அவர் காலத்தில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் மீதான அடக்கு முறை போன்றவற்றை குறிப்பிடலாம்.இதை காரணமாக வைத்தே முஸ்லிம்களின் வாக்கு மைத்ரி பக்கம் திரும்பியது. இது ஓர் வெளிப்படையான உண்மையாகும்.

நல்லாட்சி என்ற போர்வையில் ஆட்சி பீடமேறியிருக்கும் இந்த அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் பழிவாங்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். மகிந்த காலத்தில் விட்ட இனவாத பணியை மைத்ரி காலத்தில் பொது பலசேனா தொடர்கிறதா? என்ற அச்சம் அனைத்து முஸ்லிம்களின் மனதிலும் எழுந்துள்ளது.

எந்த ஆட்சியிலும் நமக்கு நிம்மதி கிடைக்காவிட்டால் முஸ்லிம்களின் முஸ்லிம் இளைஞர்களின் எண்ணப்பாங்கு நாளை இந்த நாட்டையே அடுத்த சுதந்திர போருக்கு தள்ளலாம். ஆகவே எந்த அரசாங்கம் ஆட்சியமத்தாலும் மத விடயத்தில் கடும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.  இறக்காமம் சம்பவமானது கிழக்கு மாகாணத்தில் பெரும் பூகம்பத்தையே கிளப்பியுள்ளது. அளுத்கம பேருவள போன்று இன்னுமொரு கறுப்பு பக்கம் இந்நாட்டிற்கு தேவலையில்லை.

எனவே அரசாங்கம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிடின் முஸ்லிம்களை ஒருக்காலும் திருப்திப்படுத்த முடியாது. முஸ்லிம்களே கடைசியாக உங்களுக்கு ஓர் செய்தி. நாம் அல்லாஹ்விடம் பிராத்தி்ப்போம்
மகிந்தவானாலும் மைத்திரி ஆனாலும் அவர்கள் பிறப்பாலே பௌத்தர்கள்
எல்லாம் ஓர் குட்டையில் ஊறிய மட்டைகள்.ஆகவே இறைவனிடம் கையேந்துவோம். எமது எதிர்ப்பினை ஜனநாயக முறையில் தெரிவிப்போம் கடைசி வரை போராடுவோம். 

முஸாப் அஹமட்