இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே தின நன்னாளில் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். 
அவர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- 
தொழிலாளர்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் - அதனை உரிய முறையில் பெற்றுக்கெடுக்கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிகப்பெரும் பங்காற்றியுள்ளது. 
 தொழிலாளர் தினத்தை விடுமுறை நாளாக பிரகடனம் செய்தல், தொழிலாளர் நஷ்ட ஈட்டு சட்டமூலத்தை நிறைவேற்றல், தொழிலாளர் விபத்து நஷ்ட ஈட்டை இரண்டு மடங்காக அதிகரித்தல், தொழிலாளர் உடன்படிக்கை அறிமுகப்படுத்தல், யுத்த காலத்திலும் அரச ஊழியர்களது சம்பளத்தை அதிகரிக்கச் செய்தல், தெற்காசியாவில் முதல் நாடாக அடிப்படை சம்பளத்தை நிர்ணயித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் நலன்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பெற்றுக்கொடுத்துள்ளது. 
தனியார், அரச தொழிலாளர்களது சம்பள பிரச்சினைகளுக்கும் நல்லாட்சி அரசாங்கம் குறுகிய காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.  நாட்டின் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் உள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு உழைக்கும் மக்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும். 
உழைக்கும் மக்களின் தொழில், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளமை தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியாகும். - என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

media unit of State Minister of Rehabilitation and Resettlement
R.Hassan