நீர்மூழ்கி கப்பலை அனுப்பிய டொனால்டு டிரம்ப்: பதற்றத்தில் வட கொரியா


வட கொரியா எந்த நேரத்திலும் ஏவுகணை சோதனை நடத்தலாம் என கூறப்பட்டு வருகின்ற நிலையில், அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தென் கொரியவை சென்றடைந்துள்ளதால் வட கொரியாவில் தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது.
நாளை நடைபெறவிருக்கும் வட கொரியா பற்றிய விளக்க கூட்டத்தில் கலந்துகொண்ட வேண்டும் என அமரிக்க செனட் உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் உத்தரவின் படி, யுஎஸ்எஸ் மிச்சிகன் நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியாவின் புசான் துறைமுகத்தை இன்று சென்றடைந்துள்ளது. இது இந்த கப்பலின் வழக்கமான பயணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தென் கொரியாவுக்கு எந்த ஒரு கப்பல் பயணம் செய்தாலும் அதனை சந்தேகத்தின் அடிப்படையிலேயே வட கொரியா உற்றுநோக்குகிறது. இதனால் வடகொரியாவில் பதற்றம் நிலவியுள்ளது.