Apr 27, 2017

சம்பந்தனோடு ஹக்கீம் சம்பந்தம் கலப்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தானது!

 
 
வடகிழக்கில் யுத்த காணாமல் போன தமிழர்களை கண்டுபிடித்து தருமாறு இன்று வடகிழக்கு முழுவதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் நடவடிக்கைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியிருப்பது முஸ்லிம்களுக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் காராயமாகும்.

அதே யுத்த காலத்தில் தமிழ்ப் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு காணாமல் போன முஸ்லிம்கள் தொடர்பில் மு.கா முஸ்லிம்களுக்கு பெற்றுத் தந்த தீர்வு என்ன?  இல்லை காணமல் போன முஸ்லிம் இளைஞர்களை த.தே.கூ கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளார்களா? அல்லது முஸ்லிம் இளைஞர்கள் திரும்பக் கிடைத்து விட்டார்களா?  என்ன தீர்வை மு.கா கண்டுவிட்டு த.தே.கூ உடைய இந்த நடவடிக்கைகளுக்கு துணைபோனது?என்பதை தெளிபடுத்த வேண்டும்.

தமிழ், முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்கள் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்  அதற்காக எந்த இடத்திலாவது முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்களா? அரசாங்கத்திற்கு எதிராக தமது குரலை பதிவு செய்திருக்கிறார்களா? அவ்வாறு எதுமில்லாமல் தங்களுடைய இனத்துவம் சார்ந்த அரசியல் மாத்திரம் செய்யும் கட்சியோடு முஸ்லிம் காங்கிரஸ் உறவு வைப்பதன் பின்னனியில் எந்த தேவை, யாருடை தேவை நிறைவேற்றப்படுகிறது. அல்லது யாருடைய தேவைக்காக மு.கா இணைந்து செயல்படுகிறது, என்பது தொடர்பில் மு.கா வெளிப்படையாக முஸ்லிம்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும்.


வடக்கையும் கிழக்கையும் இணைத்து அதற்குள் முஸ்லிம்களை அடிமைகளாக்கி ஆளத்துடிக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பூஜை அறையில் ஹக்கீம் மணியாட்டுவதால் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் கடந்த கால வரலாறுகள் மறந்து இவர்களுக்கு பின்னால் முஸ்லிம் சமூகம் செல்லுவதற்கு தயாராக மாட்டார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நல்லாட்சி மலர்ந்தவுடன் இனவாதிகளை நாய்க் கூண்டில் அடைப்போம், என்று வெளிக்கிட்டவர்களுக்கு பின்னால் விளக்கு பிடித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் வில்பத்துவ, கரிமலையூற்று, மாணிக்கமடு பிரச்சினைகள் என்று முஸ்லிம்கள் நாளொரு பிரச்சினைகளுக்கு முக கொடுத்துக் கொண்டு அதற்கு தீர்வு காண முடியாமலும் மேலும் வருவதற்கு இருக்கின்ற ஒலுவில் கடல்படை முகாம், இறக்காமம் மாணிக்க மடு விகாரை, அதனுடன் சேர்த்தால்போல் சிங்கள குடியேற்றம் என பிரச்சினைகளை தடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் சம்பந்தன் ஐயாவுடன் ஹக்கீம் சம்பந்தம் கலப்பது முஸ்லிம்களை மேலும் ஆபத்திற்குள் கொண்டு செல்ல வழிவகுக்கும்.

கடந்த நான்கு வாரங்களுக்கு முன்னர் வில்பத்துவ விவகாரத்தில் முஸ்லிம் பகுதிகளில் ஹர்த்தால் நடவடிக்கையை மேற்கொள்ளவிருந்ததை தடுத்த முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்தின் பங்காளியாக இருந்து கொண்டு பாராளுமன்றத்தில்
எதிர்கட்சி தரப்பில் இருப்பவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆதரவளிப்பது தெற்கில் எரிந்து கொண்டிருக்கும் இனவாத தீக்கு மேலும் எண்ணெய் ஊற்றுவதாக இந்த செயல்பாடு அமையாதா?

தமிழர்களுடன் முஸ்லிம்கள் கைகோர்க்க வேண்டும் என்று மஹிந்தவுடனிருந்த முஸ்லிம்களை தூரமாக்கி, பிரிந்து இருக்கும் வடக்கையும் கிழக்கை மீண்டும் இணைத்து முஸ்லிம்களை சொந்த நிலத்தில் அகதிலாக்கி அடிமைகளாக்க காத்திருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினது எண்ணங்களை நிறைவேற்ற ஹக்கீம் தேவையில்லாத பிரச்சினைக்குள் மூக்கை நுழைத்து முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுப்பதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 
ஏற்கனவே டயஸ்போராக்களினது தூண்டுதலால் அவர்களின் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலைக்கு வாங்கப்பட்ட இனவாதிகளால் இருக்கின்ற பிரச்சினை போதாதென்று மேலும் சிங்கள சமூகத்தின் மத்தியில் முஸ்லிம்கள் மீதான நன்மதிப்பை கெடுத்து சிங்கள முஸ்லிம் சமூகங்களுக்கிடையே பிரச்சினைகளை வளர்ப்பதன் மூலம் தமிழர்களிடம் வேரூண்றிக் கிடக்கும் அதிகாரப் பசிக்கு முஸ்லிம்களை இறையாக்க  ஹக்கீம் விலைபோவது கண்டு முஸ்லிம்கள் மௌனிகளாக இருக்காமல் ஹக்கீமையும் அவரது கட்சியையும் விரட்டியடிக்க தயாராக வேண்டும்.

அஹமட் புர்க்கான் 

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post