நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தில் ஆரம்பித்தது இன்று மாயக்கல்லியில் தொடருகிறது


இனவாதிகளின் பாரிய சூழ்ச்சியால் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்படவிருந்த நுரைச்சோலை வீட்டுத்திட்டம் அன்று வழங்கப்படாமல் தடுக்கப்பட்டது. அன்று இனவாத குழுக்கள் அதனை தடுத்தது அன்று ஆரம்பித்த பிரச்சினை மாணிக்கமடு - மாயக்கல்லி வரை தொடருகிறது.

இலங்கை முஸ்லிம்களுக்கு இது புதிதல்ல, இந்த நாட்டில் முஸ்லிம்கள் பலமுறை இனவாத சக்திகளால் துன்ப பட்டுள்ளனர், அன்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம் சுமுகமாக வழங்கப்பட்டிருக்குமாயின் இன்று இந்த பிரச்சினை எழுந்திருக்காது. அன்று அதிகாரத்தில் இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் நேரடியாக தலையிட்டிருப்பின் அன்று அது வழங்கப்பட்டிருக்கும்.

பதவிக்காகவும் வெறும் சண்டை போட்டதுதான் மிச்சம், இன்று அனைத்தையும் இழந்து கொண்டிருக்கும் முஸ்லி்ம் சமூகத்தின் விடிவுக்கு யார் குரல் கொடுப்பது?

கட்சி வேறுபாடுகள் இன்றி முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபடவேண்டும்.