வடகொரியாவில் புது தடை அமுலாக்கம்


அணு ஆயுத சோதனையின் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் அதிருப்தியை பெற்றுள்ளது வடகொரிய அரசு. வடகொரியாவின் இளம் அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை செய்து வருகிறார்
தனது சர்வாதிகார ஆட்சியால் ஒட்டுமாத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ள இவர், தற்போது தன்நாட்டு ஆண்களுக்கு ஒரு தடை விதித்துள்ளார். அதாவது, வட கொரியா ஆண்கள் யாரும் கிம் ஜாங் போன்று ஹேர்ஸ்டைல் வைக்ககூடாது என்பதுதான் இந்த தடை.
ஆண்களுக்கு 15 வகையாக முடி அலங்காரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குயிப்' மற்றும் தலை உச்சியில் முடியைக் கூம்பாக வைத்துக் கொள்ளும், "ஸ்பைக்' போன்ற முடியலங்காரங்களை இனிமேல் செய்துகொள்ள முடியாது.
குறிப்பாக, வட கொரிய அதிபர் கிம் ஜாங் போன்று யாரும் ஹேர்ஸ்டைல் வைத்துக்கொள்ளக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கிம் ஜாங் போன்று தான் அனைத்து இளைஞர்களும் ஹேர்ஸ்டைல் வைத்திருக்க வேண்டும் என கடந்த 2014 ஆம் ஆண்டு வட கொரியா அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.