காஷ்மீரின் முக்கிய பெண் தலைவர் ஆசியா அந்த்ரோபி கைது செய்யப்பட்டுள்ளார்ஜம்மு- காஷ்மீரில் நடந்து வரும் வன்முறைத் தாக்குதல்களுக்கும், தீவிரவாதச் செயல்பாடுகளுக்கும் காரணமானவர் என காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் ஆசியா அந்த்ரோபி நேற்றிரவு திடீரென கைது செய்யப்பட்டார். நாட்டின் ஒற்றுமையைக் சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரில் மாணவர்கள் போலீஸாருக்கும், ராணுவத்துக்கும் எதிராக செயல்பட்டு வன்முறையில் ஈடுபடுவதற்கு ஆசியாதான் காரணம் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், தீவிரவாதிகளுக்கு ஊக்கமளித்ததாகவும் வன்முறையாளர்களுக்கு உதவி புரிந்ததாகவும் கூறப்படும் ஆசியா அந்த்ரோபி திடீரென ஸ்ரீநகர் போலீஸாரால் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
இவர் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆசியா அந்த்ரோபியின் பேச்சைக் கேட்டுதான் காஷ்மீரில் மாணவர்கள் பலர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

விகடன்