வடகொரியாவில் எரிபொருள் விலை அதிகரிப்பு, மக்கள் மேலும் சிரமத்தில்
வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள எண்ணெய் இறக்குமதி தடையினால், அந்நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் வடகொரிய பெற்றோல் நிலையங்களில் பெற்றோல் விலை 80 சதவீதம் அதிகரித்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
வடகொரியா முன்னெடுத்து வரும் அணுவாயுத நடவடிக்கைகளுக்கு எதிராக அழுத்தத்தைக் கொடுக்கும் நோக்கில், அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க வடகொரியாவுக்கான எண்ணெய் இறக்குமதிக்கு சீனா தடை விதித்தது.

இதன்விளைவாகவே பெற்றோல் விலை அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யுத்த பீதியுடன் காணப்படும் மக்கள், தற்பொழுது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பிரச்சினைகளை முகம்கொடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

Daily Ceylon