போராட்டங்களை கட்டுப்படுத்த களத்தில் பொன்சேகா; அமைச்சுப்பதவியிலிருந்தும் நீக்கம்சேகு.

அமைச்சர் சரத் பொன்சேகா அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சுப் பதவியில் இருந்து இவரை நீக்கிவிட்டு நாட்டில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்கு முகம் கொடுக்கும் விசேட குழுவிற் தலைமைத்தாங்கும் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் முப்படையினரும் உள்ளடங்குவதாகவும்,இந்தக் குழுவானது அமைச்சர் சரத் பொன்சேகா தலைமையில் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இததொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகசந்திப்பில் இன்று கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய குழுக்கலால் நாட்டில் நடாத்தப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் நாட்டில் முன்னெடுக்கபடும் சிறந்த விடயங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் இவற்றை தடுப்பதற்காக சிறந்த குழு ஒன்று தேவைப்படுவதாகவும் இதற்காகவே சரத் பொன்சேகா தலைமையில் வெகு விரைவில் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்.