கற்பிட்டியில் முஸ்லிம் இளைஞர் சடலமாக மீட்பு

காப்பக படம்


சிலோன் முஸ்லிம் புத்தளம் செய்தியாளர்

நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி திகழி பிரதேசத்தைச் சேர்ந்த சமீம் இம்ருசான் (வயது 21) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர், நண்பர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை தனது சகோதரரின் முச்சக்கர வண்டியில் கப்பலடி  களப்பு பகுதிக்கு குளிக்கச் சென்றுள்ளார். இதன்போது இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டள்ளனர். எனினும் இவர்களில் ஒருவர் உடடியாக மீட்கப்பட மற்றவர் காணாமல் போயுள்ளார்.

இந் நிலையிலேயே மறுநாள் புதன்கிழமை குறித்த இளைஞனின் ஜனாஸா களப்பு பகுதியில் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.