குவைத் வாழ் இலங்கை முஸ்லிம்களது கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி
சிலோன் முஸ்லிம் குவைத் செய்தியாளர்

இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் குவைத் வாழ் இலங்கை முஸ்லிம்களது 16 கரப்பந்தாட்டக் குழுக்கள் கலந்து கொண்டன.

வேலைப்பளுக்களுடன் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கும் விடுமுறை நாட்களை இவ்வாறு  சந்தோசமாகக் களிக்கவும் இன்னும் மார்க்க வழிகாட்டல்களை வழங்கவும்  இக்ரஃ இஸ்லாமிய சங்கம் இவ்வகையான நிகழ்ச்சிகளை கடந்த 25 வருடங்களாக குவைத் நாட்டில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.