Apr 25, 2017

மஹிந்த தோற்றதைப் போல மைத்திரியும் விரைவில் தோற்பார்
அஹமட் புர்கான்

தங்களுடைய இயலாமையை நியாயப்படுத்த, மஹிந்த அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டே    முஸ்லிம்களை மஹிந்தவிடம் இருந்து தூரமாக்குவதற்காக, வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலில் இயங்கும், டயஸ்போராவின் கோடிகளுக்கு விலைபோன எட்டப்பர்களான முஸ்லிம் காங்கிரஸ்  இனவாதிகளின் கைக்கூலிகளாக செயல்படுகிறார்கள்.

மஹிந்த அரசாங்கத்தின் பங்காளிகளாகவும், அமைச்சர்களாகவும் இருந்து கொண்டு வடகிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் மஹிந்த அரசை பலவீனப் படுத்துவதற்காக ஐ.தே.கட்சியின் நிகழ்ச்சி நிரல்களை அச்சொட்டாக பின்பற்றுவதும் தேர்தல் காலங்களில் மஹிந்தவை எதிர்ப்பதும் தேர்தல் முடிந்த கையோடு மஹிந்தவை கும்பிட்டு வணங்கி பதவிகளை பெறுவதுமாக தங்களுடைய சுயநல அரசியலை மேற்கொண்டார்கள்.

பயங்கரவாதத்தையும் தமிழர்களுடைய இன ரீதியிலான அரசியல் போராட்டத்தையும், கருப்பொருளாக கொண்டு தங்களுடைய தேவைகளை நிறைவேற்ற தேவைப்பட்ட அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக, இனவாத ரீதியான பிரச்சார கோசத்துடன் முஸ்லிம்களின் உணர்வில் பயணித்தவர்கள், தாங்கள் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக  பயங்கரவாதம் எனும் புண்ணை ஆரவிடாமல் பாதுகாக்க வேண்டிய தேவையுடையவர்களாகவும் இருந்தார்கள்.

(2005) மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், ஏனைய சிங்கள தலைவர்களைப் போல் அந்தப் புண்ணைத்தான் அவரும் சுரண்டி அரசியல் செய்வார். என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு மஹிந்த எடுத்த சில அதிரடி வைத்தியம், தங்களுடைய அரசியல் இருப்புக்கு சவால் விடுவதாகவே அமைந்தது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் நீண்ட காலம் துன்பம் அனுபவித்து வந்த முஸ்லிம்களை காப்பாற்றி கிழக்கில் இருந்த பாசிச புலிகளை வேரோடு வெட்டி எறிந்தார்.

முஸ்லிம்கள் தன்னை நிராகரித்தவர்கள், என்ற போதிலும் கூட "மஹிந்த" முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட அதீத அன்பின் காரணமாக அந்த மாபெரும் உதவியை செய்து அப்பாவி முஸ்லிம்களையும், தமிழர்களையும் சுதந்திரமாக சுவாசிக்கச் செய்தார்.

அத்தோடு மாத்திரம் நின்றுவிடாமல் வடக்கையும் மீட்டு புலிகளுக்கு அவர் சாவுமணி கட்டினார். புலிகளால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

முஸ்லிம்கள் நாங்கள்  விடுதலைப் புலிகளால் கொள்ளப்படுகின்றோம், அவர்கள் எங்களுடைய பொருளாதாரங்களை சூறையாடுகிறார்கள். எங்கள் வாழ்விடங்களில் இருந்து எம்மை துரத்தி விரட்டுகிறார்கள். இந்த பூமியில் புலிக் கொடி பறக்க வேண்டுமா? பிறைக்கொடி பறக்க வேண்டுமா? என்று மூச்சுப் பொறுக்க மேடைகளில் கத்திய முஸ்லிம் காங்கிரஸ் "மஹிந்த" விடுதலைப் புலிகளுக்கு மருந்து கட்டி, வடகிழக்கில் முப்பது வருடங்களுக்கு மேலாக "சீல்வடிந்து" கிடந்த ஆராத புண்ணுக்கு சிகிச்சை வழங்கிய போது என்ன செய்திருக்க வேண்டும்? 

முஸ்லிம்களினுடைய பெரும் பிரச்சினை இத்தோடு முற்றுபெறுகிறது எனவே மஹிந்தவுடன் நாங்கள் பக்க பலமாக இருந்து முஸ்லிம்களுடைய ஏனைய பிரச்சினைகளையும் பேசி எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவோம் என்று மஹிந்தவுடன் இணைந்து சில காரியங்களை நிறைவேற்றியல்லவா இருந்திருக்க வேண்டும்.

அதை செய்தார்காளா? இல்லவே இல்லை... மாறாக, அந்த காலகட்டத்தில் ரணிலுடைய கைப்பிள்ளையாக இருந்து கொண்டு மஹிந்த ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டுமென்றே போராடினார்கள். 

தங்களுடைய சுயநலத்திற்காக பயங்கரவாதத்தையும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும், மரணித்த ஜனாசாக்களையும் காட்டி முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற முஸ்லிம் காங்கிரஸ், வடக்கு கிழக்கில் இருந்த முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வஞ்சிக்கப்பட்டு வந்ததையும், சொல்லில் அடங்காத வேதனைகளையும் சோதனைகளையும் அறியாதவர்களாக இருந்திருந்திருக்கலாம், ஆனால் அந்தந்தப் பகுதிகளில் தினமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகமாகவாவது மஹிந்த செய்து தந்த அந்த மகத்தான செயலை நன்றி பாராட்டியிருக்க வேண்டும்.

அதை வடகிழக்கு முஸ்லிம்கள் கடைசிவரை செய்யவில்லை......
ஒருவேளை மஹிந்த அப்போது (2005) ஜனாதிபதியாக அல்லாமல் வடகிழக்கு  முஸ்லிம்களில் பெரும்பாலான வாக்குப்பெற்ற ரணில் அந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், (2002) ரணில்- பிரபா ஒப்பந்தத்தின் பிரகாரம் விடுதலைப் புலிகளுகளுக்கு இணைந்திருந்த வடகிழக்கில் தன்னாட்சி அதிகாரம் வழங்கி, தங்கத்தட்டில் கொடுத்திருப்பார். அதனை சிங்கள மக்கள் 

ஆனால்,அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மஹிந்தவின் பணியை முஸ்லிம் சமூகம் கடுகளவேனும் சிந்தையில் கொள்ளாது, அடுத்தடுத்து வந்த தேர்தல்களிலும் மஹிந்தவை தோற்கடிப்பதற்காகவே முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களை திசைதிருப்பியது. செய்நன்றி மறக்க கூடாத இஸ்லாமியர்களான முஸ்லிம்களும், முஸ்லிம் காங்கிரஸின் நயவஞ்சகத்தனத்தை ஏற்று மஹிந்தவை எதிர்த்து வாக்களித்து வந்த சம்பவத்தை ஒருமுறை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூட ஒரு இடத்தில் பதிவு செய்திருந்தார்.

முஸ்லிம்கள் என்னை பள்ளிவாயலுக்கு அழைக்கிறார்கள், நோன்பு திறக்க அழைக்கிறார்கள், புரியாணி தருகிறார்கள், நண்பனாக பார்க்கிறார்கள்.
ஆனால் தேர்தல் காலத்தில் மாத்திரம் என்னை ஒரு எதிரியையும் விட மோசமாக நடத்துகிறார்கள் என்றார்.

இந்தளவு மஹிந்த என்ற அந்த இரும்பு மனிதனின் உள்ளத்தில் முஸ்லிம்கள் பற்றிய அபிப்பிராயம் பதிய காரணமாக இருந்தவர்கள், முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவர் ஹக்கீமும் அவருடைய அளவுக்கு அதிகமான பணப் பேராசையும்தான் காரணமாக அமையும்.

முஸ்லிம்கள் தன்னை தொடர்ந்து நிராகரித்து வருகிறார்கள் என்பதை நன்று தெரிந்து கொண்டும், மஹிந்த தனது அரசாங்கத்தின் பெரும்பாலான அபிவிருத்தியை வடகிழக்கில் அதிலும் குறிப்பாக முஸ்லிம் பகுதிகளில் செய்த அபிவிருத்தி பணிகள்தான் ஏராளம். இறுதியாக நடந்த அபிவிருத்திகளாக அவைகள்தான் இப்போதும் காட்சி தருகிறது.

இவ்வாறாக மஹிந்த நடந்து கொள்வது தங்களுடைய எதிர்கால அரசியலுக்கு கேள்விக் குறியாகிவிடும், தனது மக்களை தொடர்ந்து மந்தைகளாகவே வைத்துக்கொள்ள வேண்டும் வாக்கு வங்கி சரியாமல் பாதுகாக்க வேண்டும், அப்போதுதான் மரணிக்கும்வரை அதிகாரத்தில் இருக்க முடியும், எனவே மஹிந்த மீதான முஸ்லிம்களின் பார்வையை இன்னும் மோசமடையச் செய்வதன் மூலமாக முஸ்லிம்களை நிரந்தரமாக முஸ்லிம் காங்கிரஸின் பக்கம் வைத்துக்கொள்ள முடியும் என்ற எண்ணமும் ரணிலுடைய விருப்பத்தையும் அப்போதுதான் நிறைவேற்ற முடியும் என்ற காரணத்திற்காகவும் (மது, மங்கை கோடிக்கணக்கான பணத்திற்கு) அடிமையாகி கிடக்கும் மு.கா தலைமையை   ரணில் அவர்களும், தன்னுடைய சுயலாபத்திற்கு பாவித்துக் கொள்ள வசதியாகவும், அதேபோல தங்களுடைய தேவைகளை நிறைவேற்ற தடையாக இருக்கும் மஹிந்தவை தோற்கடித்து ரணிலை ஆட்சிக்கு கொண்டுவர காத்திருந்தவர்களின் (டயஸ்போரா) கைப்பிள்ளையாக ஹக்கீம் பயன்படுத்தப்பட்டார்.

இப்போதே மஹிந்த எம்மை எதிர்க்கிறார்.  இவருடைய  அரசாங்கம் இன்னும் சில வருடம் தொடர்ந்தால் இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துவிடும், எனவே இலங்கையை வளர்ச்சி அடையச் செய்வது ஆபத்தானது மட்டுமல்ல, மஹிந்தவுக்கு முஸ்லிம் நாடுகளின் மத்தியில் நிறைந்த செல்வாக்கு இருக்கிறது, எனவே முதலில் அவர்களிடம் இருந்து மஹிந்தவை பிரித்து பலவீனம் அடையச் செய்ய வேண்டும்.என்ற பல நிகழ்ச்சி நிரல்களோடு காத்திருந்த அமெரிக்கா அதன் கைக்கூலியான நோர்வே போன்ற நாடுகளுடன் தொடர்பை வைத்திருக்கும் (யூத) கொள்கையுடைய ரணிலையும் அவருடைய கைப்பிள்ளையான ஹக்கீமையும் விலைக்கி வாங்கியது மாத்திரமின்றி சில பௌத்த அடிப்படைவாத சித்தாந்த வாதிகளையும் பாவித்து இலங்கை முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டது.

இதில் மிகப் துரதஷ்டவசமான விடயம் மஹிந்த அரசாங்கத்தின் சில அமைச்சர்களும் ஏலவே முஸ்லிம்கள் மீது காழ்புணர்வு கொண்டு வேட்டையாட காத்திருந்த அரசியல் தலைவர்களும் தங்களுடைய நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்ய  திரைமறைவில் இருந்து செயல்பட்டார்கள்.( இப்போது அவர்கள் ஒவ்வொருவருவராக வெளிச்சத்தில் வந்து கொண்டிருக்கிறார்கள்.)

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் பின்னனியில் மஹிந்தவுக்கு சர்வதேச ந&#3008#3008;திவிசாரணை, ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அளுத்தங்களின் காரணமாக அதை எதிர்த்து போராட வேண்டிய தேவையும், பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் முடிவு காணவேண்டிய அவசியமும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆட்கொண்டது. இதனை சாதகமாக பயன்படுத்தியவர்கள் உள்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையையும், வன்முறை தாக்குதலையும் ஏற்படுத்தி இனவாதிகளை தூண்டிவிடுவதன் மூலமாக மஹிந்தவை நிலைகுலைய வைத்து அதன்படி கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த காத்திருந்தார்கள். மஹிந்த தனது மக்கள் செல்வாக்கை சர்வதேச அளுத்தத்தை தனிப்பதற்காக முற்பட்ட வேளை உணர்ச்சி கொதிப்பில் இருந்த முஸ்லிம்களும் மஹிந்தவை சர்வதேசம் வரை இழுத்துச் சென்று நீதிபெற்றுத்தருவோம் என்று சூடேற்றப்பட்ட தமிழ் மக்களையும் பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றிக் கொண்டனர்.

அவ்வாறு ஆட்சியை கைப்பற்றிய பின்னரும் கூட அதை தக்கவைத்துக் கொள்ள முடியாமலும், மஹிந்தவின் மீதான சிங்கள மக்களின் பெரும் ஆதரவை தங்களின் பக்கம் திருப்ப முடியாமலும் இன்று வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றினை நடாத்த முடியாமல் நல்லாட்சி தடுமாறுவது அதற்கு  சிறந்த உதாரணமாக அமையும்.

பெரும்பாலான சிங்கள மக்கள் மத்தியில் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை சமீப காலமாக குறைந்து வருகிறது. காரணம் தமிழர்களின் தயவில் அந்நிய சக்திகளின் தூண்டுதலின் பேரால் இந்த ஆட்சி அமைந்துள்ளது என்றும், இந்த ஆட்சி தமிழர்களுக்கு தேவையான வற்றை தட்டில் வைத்துக் கொடுக்க தயங்காது எனவும் அடிமட்ட சிங்கள மக்கள் மத்தியிலும் புரியப்பட்டுள்ளது.

எனவே, நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து பயணிக்க வேண்டுமாக இருந்தால் ஏதாவது ஒரு காரணத்தை அல்லது பிரச்சினையை சிங்கள மக்கள் இனம் காணவேண்டும், சிங்கள சமூகத்தை திருப்திப்படுத்த வேண்டும். அதற்காக இனவாத பூசாரிகளை அரச அனுசரணையுடன் அனுமதித்து முஸ்லிம்களை அடிப்படை வாதிகளாகவும் மதவாதிகளாகவும், இனவாதிகளாகவும்,ஏன் இலங்கையில் முஸ்லிம் பயங்கர வாதிகள் இருக்கிறார்கள் என்றும் காட்சிப்படுத்தி, தங்களுடைய அரச வாகனம் நகரச் செய்ய வேண்டிய தேவை நல்லாட்சிக்கு ஏற்பட்டுள்ளது. அதன்படி பல அநீதிகளை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு நல்லாட்சி தள்ளப்பட்டிருக்கிறது. இந்த விடயங்களை அனுசரித்து நடந்தும் கொள்ளும் நிலையில்தான் முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் இருக்கிறது என்பதே உண்மையாகும்.

மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்த என்ன ஆயுதத்தை நல்லாட்சி அரசாங்கம் கையில் எடுத்து வந்ததோ அதே ஆயுதத்தால் தங்களுடைய அழிவைவும் அவர்கள் நிர்ணயயித்துக் கொண்டார்கள்.

இன்று முஸ்லிம் காங்கிரஸ் எங்கு சிலைவைத்தாலும் அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் நாடு கடத்த கப்பல் கொண்டு வந்து துறைமுகத்தில் நிறுத்தினாலும், அவர்கள் இந்த அரசாங்கத்தில் வாய் திறந்து பேச முடியாத கைதிகள் ஆகிப்போனார்கள்.

காரணம் கைநீட்டி பெட்டி நிறைய பணம் பெற்றவர்கள், முஸ்லிம் சமூகத்தை அடுத்துவரும் ஜனாதிபதி,பாராளுமன்ற தேர்தல் காலம் வரை குத்தகைக்கு விட்டு இலாபம் சம்பாதித்துவிட்டார்கள். இது புரியாமல் முஸ்லிம்கள் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள்  அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளுக்காகவும் மௌனிகளாக இருந்தே ஆகவேண்டும். இதுவே அவர்களுக்கு முஸ்லிம்கள் வாக்களித்ததற்கு உரிய தண்டனை.

மஹிந்த அரசாங்கத்தில் நடந்ததாக கூறப்படுகின்ற செயல்களை மேடைக்கு மேடை விபரித்தவர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பக்கம் பக்கமாக வசனம் பேசியவர்கள், அறிக்கை விட்டவர்கள். இப்போது மேடையேறினால். கட்சியின் உள்வீட்டு சங்கதிகளையும், அபிவிருத்தி பற்றி மட்டும்தான் பேசுகிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு உண்மை பேசத் தெரியாது அதனால் நல்லாட்சியில் நடக்கும் அநீதிகள் பற்றி பேச முடியாது.

வில்பத்து காணிகளை மைத்திரி அபகரித்தது, என்பதை வாசிக்கும் நமக்கு அது செய்தி மட்டும்தான் ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதுவாழ்க்கை என்பதை நாம் சிந்திக்காத வரையில் 
புத்தர் சிலை வைத்தாலும், பௌத்தவிகாரை கட்டினாலும் யாரும் எதையும் நாங்கள் பேச முடியாது கைநீட்டவும் முடியாது.

நல்லாட்சியின் அடிமைச் சங்கிலியின் பூட்டப்பட்ட இரண்டு கால் மிருகங்களால் உழுது விளைச்சல் கொடுப்பவர்களாக நீங்கள் இருந்துவிட்டு
உண்மையைப் பேசும் எம்மை பார்த்து பதறுகளாகவும், பதக்கடைகளாகவும் விமர்சிப்பவர்கள் கடைசிவரை நீங்கள் புலம்பிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

மீண்டும் வருவார்கள் அந்த கோமாளிகள் காவிக் கொடியா? அல்லது பிறைக் கொடியா என்று நீங்களும் ஏமாளிகளாக பிறைக் கொடி என்று அவர்களை தூக்கிச் சுமந்து அனுப்பி வைத்து விட்டு மீண்டும் புலம்ப தயராகுங்கள்.

இனவாத சாயம் பூசி மாவீரன் மஹிந்தவை தோற்கடித்து மார்தட்டியவர்கள், உண்மையால் தண்டிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லைPrevious Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post