தொலைப்பேசி வழியாக இடம்பெறும் மோசடி..! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
பணப்பரிசில் கிடைத்திருப்பதாகவும், அதற்கான கட்டணத்தை செலுத்திப் பணப்பரிசிலை பெற்றுக் கொள்ளுமாறும் தொலைபேசி வழியாக அறிவுறுத்தி, மோசடியில் ஈடுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறான சம்பவம் ஒன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு 25 ஆயிரம் ரூபாய் வரையில் இழந்த பெண் ஒருவர் எமது செய்திப் பிரிவுக்கு தகவல் வழங்கினார். இதேபோன்று எமது தலவாக்கலை பிராந்திய செய்தியாளருக்கும் தொலைபேசி அழைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த மோசடிகள் தொடர்பில் காவற்துறை திணைக்களத்தை எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போது, இவ்வாறான பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், பொதுமக்களுக்கு இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் வரும் போது, அவற்றை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம் என்றும் காவற்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.