குறுகிய காலத்தில் சம்பூரணமாக அல் -குர்ஆனை மனனம் செய்த பாத்திமா சுக்ரா






அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் , தெமட்டகொடை பிரதேசத்தில்  நடாத்தி வரும் அல் -குர்ஆன் மனன வகுப்பில் பலரும் புனித அல் -குர்ஆனை மனனம் செய்து கொண்டு வருகின்றனர்   . அந்த வகையில் இலங்கை தவ்ஹீத் ஜமாத்தினரால்  'டவர் அரங்கில்' கடந்த மாதம் நடாத்தப்பட்ட அல் -குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கான கௌரவிப்பு விழாவில் குறுகிய காலத்தில் சம்பூரணமாக அல் -குர்ஆனை மனனம் செய்த பாத்திமா சுக்ரா இல்யாஸ் (அல் -ஹாபிழா) கௌரவிக்கப்பட்டார் .

கொலன்னாவ மகளிர் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் இவர் கடந்த ஆண்டு க.போ.த சா /த பரீட்சையில் 8A 1C    பெறுபேறுகளை  பெற்றுக் கொண்டு  தற்போது க.போ.த உயார் தர  உயிரியல் பிரிவில் தனது உயர் கல்வியை தொடர்கிறார் . இவரது இலட்சியம் சிறந்த வைத்தியர் ஆவதே .

அண்மையில் தனது அன்புத் தந்தையை இழந்த இவர் தனது தாய் பாத்திமா ஷஹானா காமில் அவர்களுடன் வாழ்ந்து வருகிறார் .அந்த சோகத்துக்கு மத்தியில் இவ்வாறு திறமை காட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது .

அவரது இலட்சியம் நிறைவேறி வாழ்க்கை சிறப்புற அனைவரும் பிரார்த்திப்போமாக. ஒரு வருடம் ஒன்பது மாதங்களுக்குள் புனித                     அல் -குர்ஆனை சம்பூரணமாக மனனம் செய்த இலங்கைச் சிறுமி அல் ஹாபிழா பாத்திமா சுக்ரா இல்யாஸ்.