மீதொட்டமுல்ல குப்பை மேடு விவகாரம்: நாடாளுமன்றத்தின் விசேட அமர்வு இன்றுமீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு அமைய இந்த விசேட அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குப்பை முகாமைத்துவம் தொடர்பாக வெளியிடப்படவேண்டிய சில வர்த்தமானி அறிவித்தல்களுக்கான அனுமதி இந்த அமர்வில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை அகற்றும் பணியை அத்தியாவசிய சேவையாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.